இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார் அனுஷ்கா. 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக குண்டாக ஆனவர் மீண்டும் அவருடைய பழைய தோற்றத்தைக் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மலையாளத்தில் முதல்முறையாக நடிக்க உள்ள 'கதனர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று வந்த அனுஷ்காவைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளார்கள். மீண்டும் பழைய தோற்றத்தில் அதே அழகுடன் திரும்பி வந்துள்ளார். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் அனுஷ்காவை வாழ்த்தி வருகிறார்கள்.
ரோஜின் தாமஸ் இயக்கும் இப்படத்திற்கு ராகுல் சுப்பிரமணியன் இசையமைக்கிறார். அனுஷ்கா ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அடுத்து தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். தமிழிலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருவதாகத் தகவல் வெளிவருகிறது.