இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் கடந்தமாதம் மார்ச் 28ம் தேதி வெளியான படம் 'ஆடுஜீவிதம்'.
இப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது குறித்த போஸ்டரைப் பகிர்ந்து, “உலக அளவில் 100 கோடி வசூலித்து இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த பிருத்விராஜ்.
மலையாளத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இப்படத்துடன் சேர்த்து மூன்று படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளன. 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம்” ஆகிய இந்தப் படங்கள் மலையாளத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படத்துடன் சேர்த்து மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த படங்களின் எண்ணிக்கை ஆறைக் கடந்துள்ளது. “புலிமுருகன், லூசிபர், 2018, பிரேமலு, மஞ்சம்மேல் பாய்ஸ்” ஆகிய ஐந்து படங்கள் ஏற்கெனவே அந்தப் பட்டியலில் உள்ளன.