ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

லியோ படத்தை அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில், ரஜினியின் கைகள் கைக்கடிகாரத்தால் கட்டப்பட்டிருந்ததால், இது டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‛‛ரஜினி 171 வது படத்தின் போஸ்டரில் கடிகாரங்கள் இருப்பதால் டைம் லைன் கதையாக இருக்கலாம் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் நான் இந்த படத்திற்கு வேறு மாதிரியான கதை எழுதி வைத்திருக்கிறேன். அதோடு இந்த படத்தில் ரஜினியை இதற்கு முன்பு பார்த்திராத வகையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தப் போகிறேன். இந்த படம் 100 சதவீதம் என்னுடைய படமாகத்தான் இருக்க போகிறது'' என்கிறார் லோகேஷ் கனகராஜ்.




