மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர்களின் இயக்குனர் என பெயர் பெற்றவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறை முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் என்கிற பெருமையை பெற்ற ஒரே இயக்குனரும் இவர்தான். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் யாரிடமும் பெரிய அளவில் உதவி இயக்குனராக பணியாற்றாதவர் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் ஒன்பது வருடங்களாக உதவி இயக்குனராக போராடினேன் என்கிற புதிய தகவலையும் ராமராஜன் மூலமாக எப்படி தன் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதையும் நேற்று நடைபெற்ற 'சாமானியன்' பட இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார் கே.எஸ் ரவிக்குமார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த 'ராஜா ராஜா தான்'. நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்ஷன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய 'பெத்தவ மனசு' படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்க்ஷன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி.
அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்” என்று கூறியுள்ளார்.
ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த சாமானியன் படத்தில் கே.எஸ் ரவிக்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.