‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தெலுங்கில் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிக்க ஒப்புக் கொண்ட இந்த படம் கொரோனா காலகட்டத்தில் துவங்கப்பட்டது. அதன் பின் இந்தியன்-2வையும் இந்த படத்தையும் இயக்குனர் ஷங்கர் மாறி மாறி இயக்கி வருவதால் கேம் சேஞ்சர் படப்பிடிப்பும் ரிலீஸும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ராம்சரண் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்து உரையாற்றுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் ராம்சரணின் புதிய தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது லீக் ஆகி உள்ளது. இதுவரை தாடி வைத்த ராம்சரணையே பல நாட்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த புதிய தோற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.




