ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத். தமிழிலும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் அவரது படங்களுக்கான இசையமைப்பு வேலைகள் சென்னை, வடபழனியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் தான் அதிகமாக நடக்கும்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகரான தேவிஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு இளையராஜா திடீரெனச் சென்று அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து மிகவும் நெகிழ்வான, மகிழ்வான ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
“எனது வாழ்நாள் கனவு நனவாது” என்ற தலைப்பில், “இசை என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே எனது சிறு வயதிலேயே இந்த மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் மந்திர தந்திரத்தை ஏற்படுத்தியது. எனது தேர்வுகளுக்காக நான் படித்துக் கொண்டிருக்கும் போது கூட, என்னைச் சுற்றி அவருடைய இசையால் மட்டுமே நான் வளர்ந்தேன். அவரது இசையிலிருந்து நான் பிரியாமல் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். அப்படி இருந்ததுதான் வலிமையான ஆசையுடன் நான் ஒரு இசையமைப்பாளராக மாறக் காரணமாக இருந்தது.
நான் இசையமைப்பாளரான பின் எனது ஸ்டுடியோவைக் கட்டிய பின் அதில் இளையராஜா சாருடைய பெரிய புகைப்படத்தை வைத்தேன். ஒரு நாள் எனது ஸ்டுடியோவுக்கு இளையராஜா சார் வர வேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை, வாழ்நாள் கனவாக இருந்தது. அதோடு அந்த புகைப்படம் முன் அவர் அருகே நின்று ஒரு புகைப்படத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் இருந்தது.
நமது உண்மையான ஆசைகள், அன்பை இந்த பிரபஞ்சம் எப்போதும் நிறைவேற்றும். கடைசியாக அந்த கனவு நனவானது, அதிலும் குறிப்பாக எனது குருநாதர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், இதைவிட வேறென்ன வேண்டும். எனது வாழ்வில் இது ஒரு சிறந்த உணர்வுபூர்மான தருணம்.
இளையராஜா சாரை எனது ஸ்டுடியோவுக்கு வரவழைத்து தெய்வீக இருப்பைத் தந்து, எனது ஸ்டுடியோவையும், என்னையும், எனது குழுவினரையும் வாழ்த்தியதற்கு, எனது அன்பான இசையின் கடவுளுக்கு நன்றி.
எங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கும், முன்னுதாரணமாய் இருப்பதற்கும் எப்போதும் நன்றி சார்.
எல்லையில்லா அன்பான ராஜா சார்... லவ் யு…
இந்த நிகழ்வில், என்னை பிரகாசிக்க வைக்க வாய்ப்பு தந்த ஒவ்வொரு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், நடிகைகள், இசை நிறுவனங்கள், எனது குடும்பம், நண்பர்கள், என்னோடு எப்போதும் இருக்கும் எனது குழுவினருக்கு, மற்றும் எனது பாதையில் எப்போதும் ஈடு இணையற்ற அன்பைத் தரும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.