மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என்னதான் ஆச்சு, தமிழ் சினிமாவுக்கு… எனக் கேட்க வைத்துவிட்டார்கள். பொங்கலுக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக சிறிய படங்கள் மட்டுமே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிடும்படியான ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சந்தானம் ஆகியோர் நடித்த படங்கள் கூட அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடவில்லை.
இந்த வருடம் ஆரம்பித்து 75 நாட்கள் ஆக உள்ள நிலையில் குறிப்பிடும்படியான வெற்றி அல்லது வசூல் என்பதே இல்லாமல் இருக்கிறது. இன்னும் 75 நாட்களுக்கும் அப்படியான படங்களும் வராத சூழ்நிலைதான் உள்ளது. தேர்வுகள், ஐபிஎல் போட்டிகள், தேர்தல் என அதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
இந்த இடைவெளியில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வாரமும் அது போன்ற படங்கள்தான் வர உள்ளது. சமுத்திரக்கனி, யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே', ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'காடுவெட்டி', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'அமிகோ காரேஜ்', அனிஷ், முத்துப்ரியன், மனிஷாஜித் நடித்துள்ள 'ஆராய்ச்சி' ஆகிய படங்கள் மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள படம். ஏற்கெனவே மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தமிழகத்தில் பெரும் வரவேற்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.