ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விசித்திரன் படத்திற்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் படம் காடுவெட்டி. இதனை சோலை முருகன் என்பவர் இயக்கி உள்ளார். சுபாஷ் சந்திரபோஸ், மகேந்திரன், பரமசிவம் தயாரித்துள்ளனர். சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு 'வணக்கம் தமிழ்' சாதிக் இசை அமைத்துள்ளார். புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த டீசரில் குறிப்பிட்ட ஜாதி அடையாளங்கள், வன்முறை காட்சிளும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அதோடு 'கையில் அரிவாளுடன் இருக்குற சாமிய கும்பிடுகிற எங்ககிட்ட வச்சு கிட்டா, அரிவாளைத்தான் எடுப்போம், 'உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்கதான் கிடைச்சதா? என்கிற வசனத்துடன் ஒரு கெட்ட வார்த்தையும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக வெளியாகும் படங்களின் டீசர்களில் இதுமாதிரியான கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெற துவங்கி உள்ளன.