ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கும் ‛ரத்னம்' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே சாப்பிடுவதற்கு முன்பாக விஷால் கடவுளை வணங்குவதும், அதனை நடிகர் யோகிபாபு பார்ப்பது போன்றும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிலர் அதை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரத்னம் படத்தின் பிரஸ்மீட்டில் இந்த ட்ரோல் வீடியோ குறித்து விஷாலிடத்தில் கேட்டபோது, ‛‛சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து கடவுளையும் வணங்கிவிட்டு சாப்பிடுவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதனால் என்னை ட்ரோல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை,'' என்று தெரிவித்தார் விஷால்.