ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத்தில் கேரளா கபே, பெங்களூர் டேஸ் என பல படங்களை இயக்கியவர் அஞ்சலி மேனன். இதில் 2014ம் ஆண்டில் நிவின்பாலி, துல்கர்சல்மான், பஹத் பாசில் நடிப்பில் அவர் இயக்கிய பெங்களூர் டேஸ் படம் 8 கோடியில் தயாரிக்கப்பட்டு 45 கோடி ரூபாய் வசூல் செய்தது. கடைசியாக 2022ம் ஆண்டில் ‛வொண்டர் வுமன்' என்ற ஆங்கில படத்தை இயக்கினார் அஞ்சலி மேனன்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படம் இயக்குவதற்கு அஞ்சலி மேனன் திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காதல் கதையில் இப்படம் உருவாகிறது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கபடி விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் நிலையில், அதனை முடித்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.




