ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அவரது அம்மாவின் தாய்மொழியான தெலுங்கில் 'தேவரா' படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் அறிமுக டீசர் இரண்டு மாதங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதற்கு 35 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. அவர் என்ன மாதிரியான தோற்றத்தில் படத்தில் இருப்பார் என ரசிகர்கள் பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த வீடியோவில் ஜான்வி கபூர் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இன்று ஜான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'தங்கம்' என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் அதிகமான கிளாமர் போட்டோக்களைப் பதிவிடும் ஜான்வியை இந்த போஸ்டரில் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. வெட்கத்துடன் கூடிய புன்னகையில், புடவையில் குடும்பப் பாங்கான பெண்ணாக ஜொலிக்கிறார்.
அந்த போஸ்டரைப் பகிர்ந்து, “மீண்டும் செட்டிற்குத் திரும்ப காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார் ஜான்வி.
அடுத்து ராம்சரணின் 16வது படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜான்வி. அந்த போஸ்டரைப் பகிர்ந்து, “நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.