கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் |
தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா மட்டும் நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீஜெய் கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர்.
இதில் தியா அம்மா, அப்பாவைப் போன்று மருத்துவர். திலன் என்பவரை தியா காதலித்தார். இவர்களுக்கு கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சென்னையில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், உணர்ச்சி பெருக்கு... என திருமணம் களை கட்டின. இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை தியா தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை டிரெண்ட் ஆகின.
இந்த திருமணத்தில் ரஜினி, பிரபு, கேஎஸ் ரவிக்குமார், மீனா, ராஜா, தியாகு, சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். தியாவின் திருமணத்தில் ஒட்டுமொத்த விஜயகுமாரின் குடும்பமே பங்கேற்றனர். ஆனால் வனிதா மட்டும் மிஸ்ஸிங்.