Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் சிறகுகளுக்குக் கீழே காற்றாய்… அனுபமா பரமேஸ்வரனின் நன்றி

20 பிப், 2024 - 04:58 IST
எழுத்தின் அளவு:
Anupama-Parameswaran-pens-a-gratitude-note-for-fans-on-the-birthday-wishes;-says,-'You've-been-with-me-every-step-of-the-way'


அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'பிரேமம்' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்த்தார்கள். அப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா நடித்த 'சைரன்' படம் கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று தன்னுடைய 28வது பிறந்தநாளை அனுபமா கொண்டாடினார். மொரிஷியல் தீவுகளிலிருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று 28 வயதாகிறது. என் வாழ்க்கையை, எங்கள் வாழ்க்கையை உருவாக்கியதற்கு நன்றி.

இன்று என் பிறந்தநாளைக் கொண்டும் போது ஒரு நடிகையாக என் கனவை வாழ்வதற்கான ஒரு தசாப்தமும் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறேன். 18 வயதிலிருந்து எனது ஒவ்வொரு அடியிலும் நீங்கள் இருக்கிறீர்கள். எனது பயணத்தில் உயர்வு, தாழ்வு ஆகியவற்றில் உடனிருந்து என்னை உற்சாகம் செய்கிறீர்கள். உங்களின் அன்பும், ஆதரவும் என்னைத் தொடர்ந்து நடத்தும் எரிபொருளாக இருக்கிறது.

அழகாக வாழ்வதற்கும், தைரியமாக கனவு காண்பதற்கும், இந்த அற்புதமான சாகசத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கும் உடனிருங்கள். என் சிறகுகளுக்குக் கீழே காற்றாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
80 காலகட்டத்தில் வேட்டையன்?80 காலகட்டத்தில் வேட்டையன்? துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் காலமானார்! துணிவு பட வில்லன் ரித்து ராஜ் சிங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)