வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
அது என்ன 'பசுமை திருமணம்' எனக் கேட்கிறீர்களா ?. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தனது திருமணத்தை நடத்த உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். திருமண அழைப்பிதழ் கூட பேப்பரில் இல்லாமல் டிஜிட்டல் அழைப்பிதழ் மட்டுமே அளித்துள்ளார்களாம். திருமண நிகழ்வில் பட்டாசுகளை வெடிப்பது உள்ளிட்டவற்றிற்கும் 'நோ' சொல்லிவிட்டார்களாம். 'பசுமை திருமணம்' நடத்துவதற்காக தனி குழு ஒன்றையும் ரகுல் ப்ரீத்தும் அவரது வருங்காலக் கணவர் ஜாக்கியும் பணிக்கு வைத்துள்ளார்கள் என்று தகவல்.
பிப்ரவரி 21ம் தேதி தனது மூன்று வருட காதலர் ஜாக்கி பக்னானி என்பவரை கோவா-வில் நடைபெற உள்ள திருமண வைபவத்தில் மணந்து கொள்ள உள்ளார் ரகுல். திருமணக் கொண்டாட்டங்களை நேற்றே ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று மும்பையில் உள்ள ஜாக்கி வீட்டிற்கு ரகுல் குடும்பத்தினர் சென்றுள்ளனர். ரகுல், ஜாக்கி இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் வழிபாடு நடத்தி உள்ளனர்.
திருமணத்திற்கு முந்தைய மற்ற சடங்குகள் நாளை முதல் கோவாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இத்திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.
ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் “புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.