ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
2024ம் ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அப்போதே தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே சண்டைகள் ஆரம்பமானது.
அந்த சண்டையை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் அடுத்து ஒரு சம்பவம் நடக்க உள்ளது. இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது 21வது படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, முதல் பார்வை போஸ்டர் ஆகியவை வெளியாகின. இன்று 2வது போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில் தனுஷின் 50வது படத்தின் போஸ்டர் நாளை மறுதினம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என தனுஷ் சற்று முன் அறிவித்துள்ளார். மொட்டை அடித்து லேசாக வளர்ந்த தலைமுடி, முகத்தைக் காட்டாமல் முதுகு பக்கம் மட்டும் காட்டும் தனுஷ், கழுத்துப் பகுதியில் வழிந்தோடும் ரத்தம் ''19.02.2024 D 50” என்ற எண்களுடன் மட்டும் உள்ள போஸ்டர் ஒன்றையும் தன் பதிவில் இணைத்துள்ளார் தனுஷ்.
தனுஷின் 50வது படத்தை அவரே நடித்து, இயக்கி உள்ளார்.