தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் 'ஆலன்'. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3 எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா தயாரித்து, இயக்குகிறார். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்கிறார், மனோஜ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு காசியில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது, “ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமில்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆலன்' என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு, அவனின் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அவனின் 40 வயது வரையிலான அவனது வாழ்வின் பயணம்தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மிகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இது இருக்கும் என்றார்.




