பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகரான ஜெகதீஷ் பண்டாரி என்பவர் துணை நடிகை ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும், ஜெகதீஷ் காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தாலும் தற்போது அதை ஈடு செய்யும் விதமாக புஷ்பா 2 படக்குழுவினர் இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.




