ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் படம், “தண்டல்”. இந்த படம் ஆந்திர மாநிலத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இதில் நாக சைதன்யா மீனவர்கள் தலைவராகவும், சாய் பல்லவி மீனவ பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. இதற்காக நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் அந்த கிராமத்தில் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து தோல்வியை சந்தித்து வந்த நாக சைதன்யா தனக்கு ஒரு திருப்பம் தரும் படம் வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுத்து கடுமையான பயிற்சி எடுத்து நடித்துள்ளார். சாய் பல்லவியும் மீனவ பெண்ணாக நடிக்க பயிற்சி எடுத்தார். சாய் பல்லவிக்கு தெலுங்கு பேசத் தெரியும் என்றாலும் கடற்கரையோர மீனவ பெண்களின் தெலுங்கு ஸ்லாங் கற்று நடித்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜூன் வெளியிடுகிறார்.