துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
ராம் இயக்கத்தில், யுவுன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த படம் 'ஏழு கடல் ஏழு மலை'. ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற 'ரோட்டர்டாம்' உலகத் திரைப்பட விழாவில், 'போட்டிகள்' பிரிவில் திரையிடப்பட்டது.
அத்திரையிடலின் போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் ராம், நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி, படத்தின் ஒளிப்பதிவாளர் என்கே ஏகாம்பரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
படத்தைப் பார்த்த வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் பலரும் படத்தைப் பாராட்டிய வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால் இந்தப் படத்தை ஒரு சீரியசான படமென யாரும் நினைத்துவிட வேண்டாம் என படத்தின் திரையிடலின் போது இயக்குனர் ராம் தெரிவித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று..
இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.