டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸிற்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
சந்தோஷ் நாராயணனைப் பொறுத்தவரை பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி இசைக்கும் பெயர் பெற்றவர். அந்த வகையில் பிரபாஸிற்கு இந்த படத்தில் எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். அதில் அவர் கூறும்போது, “இந்த படத்தில் பிரபாஸிற்கு ஒரு மறக்க முடியாத, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிமுக இசையை கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




