டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சாகுந்தலம், குஷி படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்து கொள்ள வசதியாக 6 மாதம் பிரேக் அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்ட சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். என்றாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். என்றாலும் அவற்றை கூடுமானவரையில் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார்.
தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருகாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.




