'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்கள் விக்ராந்த்க்கு நல்ல படமாக அமைந்தது. ஆனால், இதற்கு பிறகும் விக்ராந்த்க்கு அடுத்து கட்டத்திற்கு நகர்வதற்கான படங்கள் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து 'லால் சலாம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
லால் சலாம் படத்தை தொடர்ந்து டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வேலை இன்னாசி பாண்டியன் இப்போது இயக்கி வரும் 'புல்லட்' படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு துவங்கும் என்கிறார்கள்.