வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இமயமலைக்கு சென்று பாபாஜியை வணங்கிவிட்டு வருவார். இதன் காரணமாகவே அவரை சோசியல் மீடியாவில் சங்கி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், லால் சலாம் படத்தின் இசை விழாவில் அப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி, என் தந்தை சங்கி இல்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக சித்தரிக்க முடியாது. அவர் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர். பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர்களும் சூப்பர் ஸ்டாராக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமின்றி ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையும் தனித்தனியே பார்க்க கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.