சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? |
தமிழ் சினிமா உலகில் இப்போதைய அதிகபட்ச வியாபாரம், வசூல் தரும் நடிகர்களில் முதன்மையானவர் விஜய். அவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். பல படங்கள் சமூகக் கருத்துக்களைச் சொன்ன படங்கள். இருந்தாலும் விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவர் இயக்கிய பல படங்கள் இப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மகன் விஜய் கதாநாயகனாக நடிக்க அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் ஆபாசமான காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் ஆகியவையும் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்தில் அப்படியானவற்றை வைத்துத்தான் மகன் விஜய்க்கு வியாபார ரீதியாக ஒரு ஆரம்பத்தை எஸ்ஏ சந்திரசேகர் ஏற்படுத்தி வைத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் எழில் இயக்கத்தில் வர உள்ள 'தேசிங்குராஜா 2' பட நிகழ்ச்சியில் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், 'லியோ' படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அதன் இயக்குனர் பெயரைக் குறிப்பிடாமல் அந்தப் படத்தைப் பற்றி விமர்சித்திருந்தார். மேலும், நல்ல விஷயங்களை படமாக எடுங்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளும் ஒரு விஷயமாக இருந்தாலும், அந்தக் காலத்தில் மகன் விஜய்யை வைத்து நீங்கள் இயக்கிய படங்கள் பல தரமற்ற படங்களாக இருந்ததே என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். குறிப்பாக 'ரசிகன்' படத்தில் கதாநாயகி சங்கவி, இவரது அம்மா ஸ்ரீவித்யா ஆகியோருக்கு விஜய் சோப்பு போட்டுத் தேய்த்துவிடும் காட்சியெல்லாம் நல்ல விஷயங்களா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அதோடு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2019ல் ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா நடித்து 'ஏ' சான்றிதழ் பெற்று வெளிவந்த 'கேப்மாரி' படம் ' அந்த மாதிரியான' படம்தான் என கிண்டலடிக்கிறார்கள். அவர்களில் சிலர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களாகக் கூட இருக்கலாம்.