வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவுக்கும், கோவைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இங்கிருந்த பட்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
பல படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இசைக்கும், கோவைக்கும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான தொடர்பு ஏதுமில்லை.
ஆனால், இளையராஜா துவங்கி, ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆன்டனி என எல்லா பெரிய இசையமைப்பாளர்களும், இங்கே கச்சேரி வைத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இசைக்கச்சேரிகளுக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, அடுத்து இங்கே கச்சேரி நடத்த வருகிறார், தேனிசைத்தென்றல் தேவா!
வரும் ஏப்.,13ல், கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. அதற்குத்தான், 'கொஞ்ச நாள் பொறு தலைவா!' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
தேவா என்றால் கானா!
தேவா என்றால் கானா...கானா என்றால் தேவா எனும் அளவுக்கு, தேவாவின் 'கானா' பாடல்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆட்டம், பாட்டத்துடனான கொண்டாட்டம் என்றால், அங்கே தேவாவின் 'கானா'வுக்கே முதல் மரியாதை.
ஆனால் 'கானா'வோடு நின்று விடாமல், தன் மெல்லிசையால் பல தேவ கானங்களையும் தமிழ் இசை ரசிகர்களுக்கு வழங்கியவர் தேவா.
அதனால் தான், அவருக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். யூடியூப், இன்ஸ்டா, ஸ்பாட்டிபை என அனைத்து தளங்களிலும், அவரது பாடல்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
சென்னை, புதுச்சேரியில் தேவாவின் கச்சேரி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்து கோவையில் ஏப்.,13ல் நடக்கவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில், திரை இசை பிரபலங்கள் சபேஷ்-முரளி, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி.,சரண், உண்ணி மேனன் மற்றும் விஜய் டி.வி., சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்று, கோவை ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான போஸ்டரை, சமீபத்தில் தேவா வெளியிட்டார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடக்கவுள்ள இந்த இசைக் கச்சேரிக்கு, கோவை மக்களிடம் வழக்கம் போல, அமோக வரவேற்பு இருக்கும் என்பது உறுதி!