ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது. திரையுலகத்திலும் ஸ்ரீதேவியை மறக்க முடியாத பலர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது ஸ்ரீதேவியைப் பற்றி ஏதாவது ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட ஸ்ரீதேவி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த புத்திசாலித்தனமான 'ஏஐ' ஸ்ரீதேவி என்னை அழ வைத்துவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படம் ஒரு பக்கம் ஸ்ரீதேவி போல தெரிந்தாலும் மறுபக்கம் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி போல இருப்பதாக ரசிகர்கள் சிலர் அதில் கமெண்ட் செய்திருந்தனர். புகைப்படத்தைப் பார்த்து இது ஸ்ரீதேவி தானா என்பதை நீங்களே சொல்லுங்கள்.