மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2024ம் ஆண்டிலும் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்பதை வருடத்தின் ஆரம்பமே நிரூபித்துவிட்டது. ஜனவரி முதல் வாரத்தில் நான்கு படங்களும், இரண்டாவது வாரத்தில் நான்கு படங்களும் வெளியாகின. கடந்த வாரம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இருந்தாலும் அந்த வாரத்திற்கும் சேர்த்து இந்த வாரம் 7 படங்கள் வரை வெளியாக உள்ளன.
இந்த வாரம் ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் இத்தனை படங்கள் வெளியாகின்றன. எப்படியாவது குறைந்தபட்ச வசூலையாவது அள்ளிவிடலாம் என்பதுதான் திட்டம்.
ஜனவரி 25ம் தேதி, “ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், முடக்கறுத்தான், தூக்குதுரை'', ஜனவரி 26ம் தேதி ''லோக்கல் சரக்கு, த.நா, நியதி,” ஆகிய படங்களும் வெளியாகின்றன. எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இருந்தாலும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு எந்தப் படம் வசூலை அள்ளப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.