காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இவர் தான் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். மேலும், சிங்கப்பூர் சலூன் படத்தில் சத்யராஜ், லால் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி இருக்கிறார். ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2 : 07 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில் இன்ஜினியரிங் படித்த ஆர்ஜே பாலாஜி சலூன் தொழில் பெரியளவில் சாதிக்க துடிக்க நினைப்பது மாதிரியான கதை. இதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான் படத்தின் கதை என டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.