கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

'சேத்துமான்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தமிழ் இயக்கும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தை சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரிக்கிறார். 'கனா' புகழ் தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதியுள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைத்துள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறும்போது, “லவ் பேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது. ஒரே கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. என்றார்.