ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் |
தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவரை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் தான்..
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள ஸ்ரீ லீலா இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லப்பட்டும் கூட இவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களின் நடித்துவிட்டு மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு சமாளிப்பதையும் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீ லீலாவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கூறி உள்ளனர்.