அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சசிகுமார், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் 2019ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியான படம் 'பேட்ட'. அப்படம் வெளிவந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.
'இது படமல்ல, சம்பவம்' என 5வருடக் கொண்டாட்டமாக 'ராஜா இசையில் ரஜினியின் காதல்' ஆக இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 'மூடுபனி' படத்தில் இடம் பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' பாடலை 'பேட்ட' படத்திற்கான ரஜினிகாந்த், சிம்ரன் இடையிலான காதலுக்கு பயன்படுத்தி இன்று வெளியிட்டுள்ளார்கள். ரஜினி, சிம்ரன் காதலுக்காக 'பேட்ட' படத்தில் அனிருத் 'இளமை திரும்புதே' என்ற பாடலைக் கொடுத்திருப்பார். அந்தப் பாடல்தான் தற்போது 'இளையராஜா வெர்ஷன்' ஆக மாறியுள்ளது.
43 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இளையராஜாவின் பாடல் ஒன்று 5 வருடங்களுக்கு முன்பு வந்த படத்தின் காட்சிகளுடன் சேர்த்து எடிட் செய்யப்பட்ட இந்த 2024ம் ஆண்டில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
அதற்குக் காரணம் இளையராஜாவின் இசை, ரஜினிகாந்த்தின் நடிப்பு என தாராளமாகச் சொல்லலாம். இளையராஜாவின் பல பாடல்களைத்தான் இன்றைய ரீல்ஸ்களுக்கும், பல படங்களின் பின்னணியிலும் ஒலிக்க வைத்து ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் ரஜினிகாந்த் நடித்து பல வருடங்களாகிவிட்டதே என்ற அவரது ரசிகர்களுக்கு இன்று வெளியான வீடியோவைப் பார்த்தால் அந்த ஏக்கம் போய்விடும். மீண்டும் இருவரும் இணைந்தால் அது அவர்களது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாகவே இருக்கும்.
'மூடுபனி' படத்தில் இப்பாடலைப் பாடிய கேஜே யேசுதாஸ் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.