ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை ஆண்ட்ரியா தமிழில் மிஷ்கின் இயக்கி உள்ள ‛பிசாசு 2' படத்தில் நடித்துள்ளார். சில பிரச்னைகளால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நடிப்பு தவிர்த்து பாடுவதிலும் திறமையானவரான ஆண்ட்ரியா நிறைய பாடல்களும் பாடி உள்ளார். இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் பாடியும் வருகிறார்.
இந்நிலையில் சென்னை, வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் தமிழகத்திற்காக நிறைய முதலீட்டிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகை ஆண்ட்ரியாவின் பாட்டு நிகழ்ச்சியும் நிகழ்ந்தது.
ஸ்டைலான ஆடையில் ஆண்ட்ரியாவின் அசத்தலான குரலில் ஒலித்த ‛‛ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி..., ஹூ இஸ் தி ஹீரோ..., ஊ சொல்றியா மாமா..., ரம்பம்பம்... ஆரம்பம்... போன்ற பாடல்கள் பார்வையாளர்களை உற்சாகம் அடைய செய்தது. பாட்டு பாடியதோடு மட்டுமல்லாமல் பாட்டின்போது நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தார் ஆண்ட்ரியா.