சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் 2014ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. பாலா தயாரித்த அந்த படத்தில் நாகா, பிரயாகா நடித்தனர். அடுத்ததாக பிசாசு 2வை தொடங்கினார் மிஷ்கின். ஆண்ட்ரியா முதன்மை கேரக்டரில் நடித்தார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்தது. நிதி பிரச்னையால் சில ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிபோய் இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்ய சிலமுறை எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் பிசாசு 2 எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு ‛‛தயாரிப்பாளராக இருந்தால் அந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ரிலீஸ் செய்து இருப்பேன்'' என்று ஆண்ட்ரியா கூறி இருக்கிறார்.
‛பிசாசு 2'-வை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிக்கும் ‛டிரெயின் 2'-வை முடித்துவிட்டு இப்போது டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் மிஷ்கின். ‛பிசாசு 2' படத்தில் சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தார் என்று கூறப்பட்டது. அதை மிஷ்கின் நீக்கிவிட்டார். இந்தப்படம் மட்டுமல்ல, கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி படமும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகவில்லை.