லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛அயலான்'. ஏலியனை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. வரும் பொங்கலை முன்னிட்டு ஜன., 12ல் படம் ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இன்று(ஜன., 5) துபாயில் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
சற்றுமுன் படத்தின் டிரைலரை இந்திய நேரப்படி இரவு 8:07 மணிக்கு தமிழ், தெலுங்கில் வெளியிட்டனர். 2:19 நிமிடம் இந்த டிரைலர் வெளியாகி உள்ளது. பொதுவாக ஏலியன் கதை என்றால் அவை பூமிக்கு வந்து பூமியை அழிப்பது மாதிரியான கதைகளை தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் ஏலியன் உதவியோடு பூமியை காப்பது மாதிரியான கதையாக இருக்கும் என டிரைலரை பார்க்கும்போது ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலராக பார்க்கும்போது ரசிகர்களை ஈர்க்கும் விதமாக கலகலப்பாகவும், விஷூவலாகவும் சிறப்பாக உள்ளது.