தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார். தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாமன்னன், வாழை என அவர் படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக மீண்டும் தனுஷ் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு கடந்த வருடமே அதிகாரப்பூர்வமாக வெளியானது.. இந்த நிலையில் இந்தப் படம் தனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மெண்ட் படம் போல இருக்கும் என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் மேடையில் பேசும்போது, “கர்ணன் படத்தை தொடர்ந்து அதைவிட மிகப்பெரிய படம் ஒன்றை கொடுக்க வேண்டும் என தனுஷ் விரும்பினார். அந்த படம் நிச்சயமாக லோகேஷ் கனகராஜுக்கு கைதி, விக்ரம் படங்கள் எப்படியோ அதுபோல எனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மென்ட் படமாக இருக்கும்” என்று கூறினார்.