பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
2023ம் ஆண்டில் 25 நாட்களைக் கடந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 'வாரிசு, துணிவு, டாடா, ஜெயிலர், லியோ, போர் தொழில், குட் நைட், இறுகப்பற்று, மாமன்னன், மாவீரன், மார்க் ஆண்டனி, டிடி ரிட்டன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே 25 நாட்களைக் கடந்து ஓடின. அவற்றில் சில படங்கள் 50 நாட்களையும், ஓரிரு படங்கள் 100 நாட்களையும் கடந்த படங்களாக அமைந்தன.
இப்போதெல்லாம் ஒரு படத்தின் வசூல் மட்டுமே அதிகம் பார்க்கப்படுகிறது. அந்தப் படங்கள் எத்தனை நாட்கள் ஓடியது என்பது குறித்தெல்லாம் யாரும் அதிகம் கவனிப்பதில்லை. கடந்த 2023ம் ஆண்டின் கடைசி 25வது நாள் படமாக 'கான்ஜுரிங் கண்ணப்பன்' படம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி வெளியான இப்படம் நேற்றுடன் 25 நாளைக் கடந்துள்ளது. சதீஷ் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வசூலைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த படம்.
காமெடியிலிருந்து கதாநாயகர்களாக மாறிய நடிகர்களான சந்தானம், சூரி, யோகி பாபு, சதீஷ் ஆகியோரது படங்கள் கடந்த ஆண்டில் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று.