அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
2024ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வரப் போகிறது என நான்கு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. “அயலான், அரண்மனை 4, கேப்டன் மில்லர், லால் சலாம்” ஆகிய படங்கள்தான் அந்த நான்குப் படங்கள். தற்போது அந்த போட்டியிலிருந்து 'அரண்மனை 4, லால் சலாம்' ஆகியவற்றின் விலகல் உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'அயலான், கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அவற்றின் வெளியீட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது என்பது ரசிகர்களுக்கும் தெரியும்.
'அரண்மனை 4' படத்தின் எந்த ஒரு சத்தத்தையும் காணோம். 'லால் சலாம்' வெளியீட்டிலிருந்து பின் வாங்குகிறது என்பதை 'மிஷன் சாப்டர் 1 அச்சம்' படத்தின் பொங்கல் வெளியீடு மூலம் புரிந்து கொள்ளலாம். இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது.
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் 'லால் சலாம்' படம் பொங்கல் போட்டியிலிருந்து தள்ளிப் போவது உறுதி செய்யப்பட்டால் அவரது ரசிகர்களுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.