ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. இதில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழா முதலில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பதாக இருந்தது. ஆனால் அங்கு இட வசதி குறைவு என்பதால் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
முன்பு நிகழ்ச்சி நடக்கும் தேதி டிசம்பர் 24-ஆக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேதியில் சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடைபெற இருப்பதால் தற்போது விழா நடக்கும் இடத்தை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதாலும், இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் 'கலைஞர் 100' விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.