25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு |
சென்னையில் இயங்கி வரும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. நேற்றுடன் இந்த விழா நிறைவு பெற்றது.
இந்த விழாவில் போட்டி பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த படமாக சசிகுமார் நடித்த 'அயோத்தி' படம் தேர்வு பெற்றது. அதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக 'உடன்பால்' படம் தேர்வானது. அதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
'மாமன்னன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 'விடுதலை' படம் சிறந்த படத்திற்கான ஜூரி விருது பெற்றது.
போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும் தேர்வானார்கள். சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய 'லாஸ்ட் ஹார்ட்' படம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று நடந்த நிறைவு விழாவில் இந்த விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது.