இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி | தமிழ் சினிமாவை குறை சொன்ன ஜோதிகா: மவுனம் கலைப்பாரா சூர்யா? | பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி | ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக் : ஆன்மிக வாழ்க்கை வாழும் நடிகை சச்சு |
கிளாப்-இன் பில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் படம் 'நேற்று இந்த நேரம்'. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். கெவின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் சாய் ரோஷன் கூறும்போது “பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கி இருக்கிறோம். ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. எந்த ஒரு குற்றத்தையும் வெளியில் கொண்டு வருவது விசாரணை. அந்த விசாரணையே குற்றமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தில் புதிதாக சொல்ல வரும் விஷயம்” என்றார்.