நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் 'ஏழு கடல் ஏழு மலை'. கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய ராம் இயக்கி உள்ளார். சூரி, அஞ்சலி, நிவின் பாலி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகி இருக்கிறது. வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, ‛‛சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி. மேலும் படத்தில் நடித்த நிவின்பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.