ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.பிரபு திலக், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி உள்ளர். படம் பற்றி அவர் கூறும்போது “இது ஹெப்பர்லிங்க் ஜார்னரில் உருவாகி உள்ள படம். இதில் 4 தனிதனி கதைகள் இருக்கிறது. அவைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிற மாதிரியான திரைக்கதை. இதில் சமுத்திரகனி, மற்றும் யோகி பாபு நடிக்கும் கதைகள் முன்னணியில் இருக்கும். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது” என்றார்.