‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, தம்பி ராமைய்யா, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமின்றி அதற்கு முன்பே தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் மோகன்ராஜ்.
தற்போது தனி ஒருவன்- 2 படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மோகன் ராஜா, இப்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடம் முக்கியத்துவம் பெருகிறதாம்.




