ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? |
ஜெயிலர் படத்திற்கு பின் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் ரஜினி பிறந்தநாளான இன்று(டிச., 12) படத்திற்கு ‛வேட்டையன்' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் ஸ்டைலாக நடந்து வரும் ரஜினி, கண்ணாடியை அவரது ஸ்டைலில் மாட்ட, ‛குறி வச்சா இரை விழணும்' என பஞ்ச் டயலாக் பேசி உள்ளார்.