'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
2023ம் ஆண்டின் கடைசி மாதத்தில் உள்ளோம். இந்தாண்டில் பிரபலமாக தேடப்பட்ட விஷயங்களை கூகுள் பட்டியலிட்டுள்ளது. அதன்படி 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‛ஜவான்' படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ‛கடார் 2', மூன்றாம் இடத்தில் ‛ஓப்பன் ஹெய்மர்', நான்காம் இடத்தில் ‛ஆதிபுருஷ்', ஐந்தாம் இடத்தில் ‛பதான்', ஆறாம் இடத்தில் ‛தி கேரளா ஸ்டோரி', ஏழாம் இடத்தில் ரஜினியின் ‛ஜெயிலர்', எட்டாம் இடத்தில் விஜய்யின் ‛லியோ', ஒன்பதாம் இடத்தில் ‛டைகர் 3', பத்தாம் இடத்தில் விஜய்யின் ‛வாரிசு' ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன.
டாப் 10 இந்திய படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. ஷாரூக்கானின் இரு படங்களும், விஜய்யின் இரு படங்களும் டாப் 10 பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.