இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சென்னை : என் வீட்டிலும் மழைநீர் தேங்கியுள்ளது, 2015-ஐ விட மோசமாக உள்ளது. மழைநீர் வடிகால் என்னாச்சு, கேவலமாக உள்ளது என விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்குபார்த்தாலும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தான் வசிக்கும் அண்ணாநகர் வீட்டிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது என கோபமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் விஷால் பேசியிருப்பதாவது : எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.
இப்ப நான் அண்ணா நகரில் தங்கி இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க. 2015ஐ விட மிக மோசமாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் திட்டம் என்னாச்சு. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க. உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.
இவ்வாறு அந்த வீடியோவில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.