பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் '3'. அந்த சமயத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது . இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் 3 படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.
இதனால் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சில தியேட்டரில் இப்போது 3 படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். தற்போது நடிகர் தனுஷ் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, " 3 படத்தின் ரீ ரிலீஸ் ஆதரவைப் பார்த்து எமோஷனலாக ஆக உள்ளது. ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.




