பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‛‛பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் எந்த பொதுவெளியில் நின்று எகத்தாளமாக அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து தொடச்சி தூர எரியனும்.
அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்திலும் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அங்கெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி''
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.