நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை பார்த்த ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதோடு எனக்கும் கதை பண்ணுங்க. பியூச்சரில் நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். அப்படி ரஜினி பேசியிருந்த ஆடியோவும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து கொண்டு அவரை அணுகினார் தேசிங்கு பெரியசாமி. அவர்கள் இணையப்போவதாக செய்திகள் வெளியானபோதும் அந்த கூட்டணி உறுதியாகவில்லை.
இந்த நிலையில் அதே கதையை சிம்புவிற்கு சொல்லி ஓகே பண்ணிவிட்டார் தேசிங்கு பெரியசாமி. சிம்புவின் 48வது படமாக உருவாகும் அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்திற்காக தற்போது தனது உடல் கட்டை தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ரஜினி இடத்தில் நான் கூறிய போது, எனக்கு வாழ்த்து தெரிவித்தவர், நல்லா சூப்பரா பண்ணுங்க என்று தெரிவித்தார் என கூறியிருக்கும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறார். பல மாதங்களாக சில பயிற்சிகளை பெற்று தனது பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.