ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பான் இந்தியா படம். திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடந்து வந்தது.
சண்டை காட்சி ஒன்றில் சூர்யா நடித்தபோது ரோப் கேமரா விழுந்து காயம் அடைந்தார். கேமரா விழுவதை பார்த்து அவர் விலகியதால் நூலிழையில் தப்பினார். ஆனாலும் தோள்பட்டையில் கேமரா உரசியபடி விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூர்யா தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்களே, நான் விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு நன்றி. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருகிறேன். உங்களின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.